சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ரிஷியை போன்றவர் அவருடன் ஜெயிலர் படத்தில் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று மதுரையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் வசந்த் ரவி தெரிவித்தார்.
இயக்குனர் தருண் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் அஸ்வின்ஸ். மதுரைக்கு சென்ற இப்படக்குழு மதுரை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பிரியா காம்ப்ளக்ஸ் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது ரசிகர்கள் படக்குழுவுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அதைத்தொடர்ந்து படத்தின் நாயகன் வசந்த்ரவி, செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மதுரைக்கு வந்ததில் மகிழ்ச்சி, தரமணி ராக்கி போன்ற திரைப்படங்களுக்கு பிறகு அஸ்வின்ஸ் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள நான் தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருவது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி அளிக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சூப்பர்ஸ்டார் ஒரு ரிஷியை போல அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பாக்கியம் என்று தெரிவித்தார்.