நீலகிரி, குமரி, நெல்லையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, ஈரோடு, சேலம், மதுரை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தை பொறுத்தவரை
செப்டம்பர் 3 வரை மழை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.