மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உடனிடாயக மாநில முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, காங்கிரÞ தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 55 நாட்களாக மணிப்பூர் குறித்து மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் இறுதியாக உள்துறை அமைச்சர் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியுடன் பேசி இருப்பதாக தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் மாநிலம் குறித்த பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்க நாடே காத்திருப்பதாக தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி பொதுவான அரசியல் பாதையைக் கண்டறிய வேண்டும் என கேட்டுக் கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மற்றும் மோடி அரசும் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும், மணிப்பூர் வன்முறையில் தங்களின் மோசமான தோல்விகளை மறைக்க முடியாது என தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கான தொகுப்பு தாமதமின்றி தயாரிக்கப்பட வேண்டும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டார்.