மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் நிகழ்வு மயிலாடுதுறை சாய்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 100 பேருக்கு சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் ரொக்கத்தொகை வழங்கி பாராட்டினார். மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மரக்கன்றுகளும், மஞ்சப்பையும் வழங்கப்பட்டது.