கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் செயல்படும் அரசு ஆர்.வி. ஆண்கள் மேநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலம் ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் விதமாக விடியல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அர்ச்சனா, ஸ்வாதி அதேபோல் மாணவர்கள் மனோஜ், சந்துரு ஆகியோருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்த கல்வித் தொகையினை ராயக்கோட்டையில் செயல்படும் விடியல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் தலைமை விருந்தினராக லக் இந்தியா நிறுவன மேலாளர் ராமமூர்த்தி மற்றும் விடியல் தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஜெயபிரகாஷ், சிவகுமார், திலீப் மற்றும் நாகேஷ் ஆகியோர் பங்கேற்று கல்வி உதவித் தொகையினை வழங்கினர்.
