அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் நலத்திட்ட உதவி

சிவகங்கையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனைகளை சார்ந்த மருத்துவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் வழங்கி தெரிவிக்கையில்:
முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் அனைத்துத்தரப்பு மக்களும் பாராட்டும் வண்ணம் உள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டமும் சமவளர்ச்சி பெறுவதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கின்ற வகையில், அவர்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, அதன்மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாத்து வருகிறார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் முந்தைய காலத்தில் செயல்படுத்தப்பட்ட குடிசையில்லா தமிழகமாக மாற்றிடும் வகையில், வீடு வழங்கும் திட்டம், சுகாதாரம், கழிப்பறை, டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வேறு பெயர்களில் ஒன்றிய அரசு அளவிலும், தேசிய அளவிலும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.
அதில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கடந்த 23.07.2009 அன்று துவங்கப்பட்டது. இத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒன்றிணைந்த 23.09.2018 முதல் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் திட்டப்பயனாளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் வரை மருத்துவச் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் 16 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 1 வருடத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 8,553 பயனாளிகளுக்கு ரூ.8,88,72,675 மதிப்பீட்டில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடையவதற்கு தகுதியாக ரூ.1,20,000 மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடையலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மையத்தை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து விழிப்புணர்வுப் பணிகளும் மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதுதவிர மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 போன்ற திட்டங்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, தமிழக மக்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், 7 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்கள் ஆகியோர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு இனிப்பு மற்றும் பழவகைகள், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் ஆகியவைகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, நகர்மன்றத் தலைவர் சே.முத்துத்துரை, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ரேவதி, நகர்மன்ற துணைத்தலைவர் நா.குணசேகரன், நகாட்சி ஆணையர் லெட்சுமணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் செவிலியர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...