தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு, என சென்னை வானிலை ஆய்வு மையம். தமிழகத்தில் நாளை முதல் 17 தேதி வரை 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிக பட்சமாக பந்தலூரில் -17 செ.மீ., தேவாலாவில் -12 செ.மீ., பிரையர் எஸ்டேட் -11 செ.மீ., ஹாரிசன் எஸ்டேட் -9 செ.மீ. மழை பதிவு என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
