சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார்.
சட்டவிரோத கடன் செயலிகளால் பல தற்கொலைகள் தூண்டப்பட்டு இருப்பதை தொடர்ந்து இத்தகைய நடவடிக்கை.
நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவு செய்யப்பட்டது.
ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் செயலிகள் மட்டுமே செயல்பட முடியும். ரிசர்வ் வங்கி அனுமதி பெறாத செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய ஐடி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.