கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசத்தில், தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கோடை விழாவில், கிராமிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கோடை விழா பாபநாசத்தில் நடைபெற்றது. இதில், கிராமப்புற பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களை சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.