அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகளுக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதை அடுத்து அவரிடம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆகிய 2 துறைகளும் மாற்றப்பட்டு அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மின்சாரத்துறை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதல் பொறுப்பாக வீட்டு வசதிதுறை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.