திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், லஞ்சமாக பெற்ற கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச பணம் கைமாறப்போவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, மாவட்ட துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையில், காவலர்கள் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், கணக்கில் வராத 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த லஞ்ச பண வழக்கு, பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.