மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தகுதி சான்றிதழ் இன்றி, மாணவர்களை அழைத்து சென்ற 5 ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின்படி, வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவுறுத்தலின்பேரில், சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது, மாணவர்களை அழைத்து சென்ற ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் மற்றும் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன், விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.