காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பொன்னியின் செல்வன் 2ம் பாகம் படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 112 காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்கள் இயங்கி வருகின்றன. இவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, போட்டித்தேர்வு பயிற்சிகள், மாலைநேர வகுப்புகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக சிறார் மன்றங்களைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களின் வேண்டுகோளை ஏற்ற காவல் இணை ஆணையாளர் மனோகர் மாணவர்களை மதுரவாயலில் அமைந்துள்ள ஏ.ஜி.எஸ்.திரையரங்கிற்கு சிறுவர்களை அழைத்து சென்றார்.
அங்கு வரலாற்று திரைப்படமான பொன்னியன் செல்வன்2ம் பாகம் திரைப்படம் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.