காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்எல்ஏ சுந்தர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக மாநில நெடுஞ்சாலை துறை சார்பாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே சாலையோரங்களில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு தற்போது மீண்டும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைகளில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான தொடக்க விழா கீழ்க்கதிர்பூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்விமோகன் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அதன்படி புதுப்பாடி – வடஇலுப்பை சாலை வாலாஜாபாத் – சுங்குவார்சத்திரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.