சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக திருநங்கைகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சர்வதேச ரோட்டரி மாவட்டம் 3232 உடன் இணைந்து திருநங்கைகள் மூலம் 06.06.2023 அன்று நகரின் பல்வேறு சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டது.
ஏற்கனவே பல நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், பாதுகாப்பற்ற சாலை நடைமுறைகளின் விளைவுகளைப் பற்றி மக்கள் மிகவும் உணர் திறன் மற்றும் தீவிரமானவர்களாக மாறவேண்டிய அவசியம் இன்னும் உள்ளது.
சிவப்பு சிக்னலில் நிற்கும் போது வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் உள்ளது.
இந்தநிகழ்வின் போது 6 மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழுவினர் ஏர் ஹோஸ்டஸ் உடை அணிந்து சீட்பெல்ட் மற்றும் தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை கை சிக்னல்களைப் பயன்படுத்தி, போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ஒரு நிமிடம் சத்தமாக ஒலி எழுப்பினர். இந்த ஃப்ளாஷ் அண்ணாநகர் வளைவில் இருந்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் துணை ஆணையாளர் போக்குவரத்து வடக்கு திரு.சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
சாலைப் பாதுகாப்புக்கான மாவட்டத் தலைவர் Rtn திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களை ஒரு சமூகப்பணியின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் ஒரு தளத்தை உருவாக்கி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
“Born to Win” திருநங்கைகள் குழுவிற்கு, திருநங்கைகள் அதிகாரமளித்தல் மாவட்டத் தலைவர் Rtn.V.ருக்மணி அவர்களால் பிரத்தியேகமாக பயிற்சி அளிக்கப்பட்டது.
அண்ணாநகர் ரவுண்டானா, திருமங்கலம் சந்திப்பு ஈகா சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் நந்தனம் சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த சாலை பாதுகாப்பு பிரச்சாரம் மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரச்சாரத்தின் முடிவில், முதலுதவி பெட்டிகள் அமைப்பாளர்களால் சாலையில் பயணிப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.