கன்னியாகுமரியில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி உள்ள எம்.பி. விஜய் வசந்த், அந்த பணியினையும் துவக்கி வைத்துள்ளார்.
குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக குளச்சல் தொகுதியில் வில்லுக்குறி மாடன் தட்டுவிளை சர்ச் சாலையை கான்கீரிட் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து சாலையில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியை எம்பி விஜய்வசந்த் துவக்கி வைத்தார்.
இந் நிகழ்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி. உதயம், காங்கிரஸ் வட்டார தலைவர் பால் துரை, பங்கு தந்தை ஜெயகுமார் பஞ்சாயத்து தலைவர் பிரகாஷ் தாஸ், வார்டு உறுப்பினர் ஜெபாஸ்டின் கலந்து கொண்டனர்.