காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான உள் மற்றும் புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுவது வழக்கம்.
இந்நிலையில் இதில் இன்று கண்காணிப்பாளர் அறையில் திடீர் புகை வெளியேறியதால் ஊழியர்கள் அவசரமாக உள்ளே சென்று பார்த்தபோது சிசிடிவி சேமிப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து புகை வருவதை கண்டனர்.
தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் தீ மேலும் மருத்துவமனைக்குள் பரவாமல் தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கையாக ஊழியர்கள் மின் விநியோகத்தை நிறுத்தி வைத்தனர்.
இந்த தீ விபத்தில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் சேமிப்பு இயந்திரம்,டிவி மற்றும் பால் சீலிங் உள்ளிட்டவைகள் எரிந்து சேதம் அடைந்தது.