தாட்கோ மூலம் CAD, CAM மற்றும் Industrial Automation பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக Computer-Aided Design (CAD), Computer-Aided Manufacturing (CAM) மற்றும் Industrial Automation பயிற்சிகளை வழங்க உள்ளது என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த பயிற்சித் திட்டம் மூலம் தொழில்நுட்ப துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் திறன் உருவாக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர்:
ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்
பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது மின் மற்றும் மின்னணுவியல் (EEE) பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது 18 முதல் 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
பயிற்சி விவரங்கள்
பயிற்சி காலம்: 90 நாட்கள்
பயிற்சி நடைபெறும் இடங்கள்: பெரம்பலூர் மற்றும் சேலம்
பயிற்சியின்போது தங்கும் வசதி மற்றும் அதற்கான செலவினங்களை தாட்கோ ஏற்கும்
வேலைவாய்ப்பு உறுதி
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் தகுதியான பயிற்சியாளர்களுக்கு, பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.
ஆரம்ப மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ளவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
