பெருந்துறை அருகே 10 அடி நீளமுள்ள சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்து நடனமாடியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கோவை பைபாஸ் ரோட்டில் உள்ள கருக்கங்காட்டூர் என்ற பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில் அப்பகுதியின் சாலையோரத்தில் உள்ள முட்புதர் அருகில் சுமார் 10 அடி நீளமுள்ள மஞ்சள் மற்றும் கருப்பு சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடமானடின.
சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடமாடியதை தொடர்ந்து இரண்டு பாம்புகளும் வெவ்வேறு திசையில் சென்றன. பாம்புகளின் இந்த நடனத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.