அரசுப் பேருந்துகள் புறவழிச் சாலை புறக்கணிப்பு! சென்னை மக்கள் மகிழ்ச்சி!

வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு வரும் அரசு விரைவு பேருந்துகள் இனி மதுரவாயல் வழியே செல்லாமல் தாம்பரம் வழியே செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அரசு விரைவு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் பகல் நேரங்களில் சென்னை நகருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனால் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள் மதுரவாயல், சென்னை புறவழிச்சாலையை பயன்படுத்தி வந்தன. இதன் காரணமாக தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தற்காலிக வெளியூர் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு பயணிகள் அங்கே இறக்கி விடப்பட்டனர்

- Advertisement - WhatsApp

மேலும், அரசு விரைவு பேருந்துகளில் வரும் பயணிகள் பெருங்களத்தூரில் இறங்கி மற்றொரு பேருந்து, இரயில், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் மாநகருக்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர்.

தற்போது, சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில் வெளியூர் பேருந்துகள் சென்னை நகருக்குள் செல்ல அனுமதிக்குமாறு அரசுக்கு பயணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த அரசு பிப்ரவரி 17 முதல் தாம்பரம், பல்லாவரம் வழியே பேருந்துகளை இயக்குமாறு ஓட்டுனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

- Advertisement - WhatsApp

அதே சமயம் மாலை 5 மணிக்குமேல் போக்குவரத்து நெரிசல் நேரம் என்பதால் புறவழிச்சாலையை பயன்படுத்தி கோயம்பேட்டிற்க்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த புதிய உத்தரவின் மூலம் புறவழிச்சாலையை புறக்கணித்து பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம் சுமார் 10 கிலோ மீட்டர் வரை தூரமும் 20 நிமிட நேரமும் மிச்சமாகும் என்பதும் டீசலும் ஓரளவிற்கு மீதமாகும் என்பதும் உண்மையே.

இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயனடைவர் என்பதே நிதர்சனமான உண்மை.
விரைவில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளதால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அங்கிருந்து புறப்படும்.

எனவே, இன்னும் சில மாதங்கள் மட்டுமே வெளியூர் பேருந்துகள் சென்னை நகருக்குள் வரும் என்பது கொஞ்சம் கசப்பான விஷயம் தான். அதே சமயம் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் சிரமம் இன்றி சென்னை மாநகருக்குள் செல்ல கிளாம்பாக்கத்தில் இருந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும் என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...