சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2024ம் ஆண்டு சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி அறிவிப்புக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில்மகேஷ், சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக 3 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் இந்த முறை சிறப்பு விருந்தினர் நாடாக மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.