லஞ்சப் புகாரில் 6 ஆண்டு சிறை செல்கிறார் வீ.ஏ.ஓ.

திருவள்ளூர் அருகே இறந்தவர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் நிதியை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கரிலம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் கற்பகம். இவரது கணவர் பண்டாரி கடந்த 2010-ல் உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அரசு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை கேட்டு குமாரராஜபேட்டை கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலுவிடம் கற்பகம் மனு அளித்தார்.

- Advertisement - WhatsApp

இதனையடுத்து மனு மீது நடவடிக்கை எடுக்க லஞ்சமாக ஆயிரத்து 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என விஜயராகவலு கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கற்பகம் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் தந்த புகாரில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக விஜயராகவுலு கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்த திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றம் கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலுக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

சார்ந்த செய்திகள்

Largest Metro Station Panagal Park; Says official

The Panagal Park Metro Station, the second largest metro station in Chennai, is being prepared in a grand manner. The station, which is being...

2025 குடியரசு தினத்தில் சிம்பொனி ரிலீஸ் – இளையராஜா அறிவிப்பு

தனது புதிய சிம்பொனி இசை 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடப்படும் என இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தெரிவித்துள்ளார்.ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும்...

மக்களவைத் தேர்தல் – கமல் போட்டி இல்லை

வருகின்ற மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக...

சின்னப்பிள்ளைக்கு வீடு! கனவு இல்லத்தை நிஜமாக்கிய ஸ்டாலின்

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளை வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடனடியாக வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பிள்ளை. இவரது கணவர்...