கம்பத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த யானை காட்டுக்குள் விடப்பட்டுள்ள நிலையில், அரிசி கொம்பன் யானை புல்லை கழுவி உண்ணும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் மக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் காட்டு யானை இரண்டு நாட்களுக்கு முன்பு கோதையார் அணையில் இருந்து சுமார் நான்கு கிமீ தொலைவில் முத்துக்குழி வயல் பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
இந் நிலையில் அரிசிக் கொம்பன் யானை நேற்று கோதை ஆறு அணைக்கு வந்தது. அங்கு அணையில் கரையோரம் நின்று தண்ணீர் அருந்திய காட்சிகள் வெளியாகின. மேலும் அணையை சுற்றி வலம் வந்தது இந்த நிலையில் தற்போது யானை குட்டியாறு அணைக்கு வந்த வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் அரிசி கொம்பன் யானை கரையில் உள்ள புற்களை தும்பிக்கையால் புடுங்கி தண்ணீரில் கழுவி அழகாக சாப்பிடுகிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அரிசி கொம்பன் வனத்தை விட்டு வெளியில் வராமல் தனக்கான உணவுகளை அங்கேயே தேடிக் கொள்வது வனத்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது.