செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 857 பயனாளிகளுக்கு 2 கோடியே 8 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.
திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய முகாமின் நிறைவு நாளான இன்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பேரில், 105 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 97 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டை, 44 நரிக்குறவ பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ் உள்பட 857 பயனாளிகளுக்கு 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.