பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம்பெண் குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் தவிக்கவிட்டு சென்ற கொடூர சம்பவம் சங்கரன்கோவில் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் ஒரு துணி சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.
அழுது கொண்டிருந்த குழந்தையின் சத்தம் கேட்டு அங்கே வந்த பொது மக்கள் உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற மருத்துவ ஊழியர்கள் குழந்தைக்கு முதலுதவி அளித்த பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சின்னகோவிலாகங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.