திருவள்ளூரில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பெரியகுப்பத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் கூடுதல் வசதிக்காக அந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நகராட்சி 11-ஆவது வாா்டில் குளக்கரை தெருவில் 25 லட்சம் ரூபாயில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையம் கட்டி முடிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த மையத்தில் யோகா, மனநலம், கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனை அறை போன்றவை உள்ளன.
இந் நிகழ்வில் நகர மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் கா.ராஜலட்சுமி, 11-வது வார்டு உறுப்பினர் வி.இ.ஜான், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.