சென்னை அடுத்த செங்குன்றத்தில் வாடிக்கையாளர் வாங்கிய தண்ணீர் பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலவாயல் பகுதியை சேர்ந்த கரிக்கோல் ராஜ் கூல்ட்ரிங்ஸ் கடை ஒன்றில் 20 ரூபாய் கொடுத்து அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டிலை வாங்கி குடிக்க முயன்றுள்ளார். அப்போது தண்ணீர் பாட்டிலுக்குள் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் ஆலைகளில் உரிய முறையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செல்வம் என்பவர் கடம்பத்தூர் ஒன்றியம் கூட்டுச்சாலையில் இருந்த கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கிய போது அந்த குளிர்பானம் காலாவதியாகி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.