திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீசிய சூறாவளிக் காற்றால் சாலையில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனர்.
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீரென்று பலத்த சூறாவளிக் காற்று வீசியது. சூறாவளிக் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாத சாலையில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அப்படியே சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும், மின்சாரத் துறையினரும் சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.