குமரி மாவட்ட கடற்கரைகளில் ஒரு லட்சம் பனை மரம் விதைகள் நடும் நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் புனித ஜான்Þ கல்லூரி நடத்தும், ஒரு லட்சம் பனை மரம் விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக, குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு, குளச்சல் பகுதியில் உள்ள கடற்கரையில் பனை மர விதைகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக, நிர்வாகம் சார்பில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அருள்தந்தை ஜான்போÞகோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.