முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் ரூபாய் குருநாத் ஆகயோர் சந்தித்தனர்.
அப்போது ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையடுத்து அக்கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் தலைமை செயல் அலுவலர் காசி விஸ்வநாதன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவன விவகார அலுவலர் கே.எஸ்.பாலாஜி மற்றும் கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.